Tuesday 7th of May 2024 11:46:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
நவம்பருக்கு முன் அமெரிக்காவில் 208,000 வரை  கொரோனா மரணங்கள் உயரலாம் என எச்சரிக்கை!

நவம்பருக்கு முன் அமெரிக்காவில் 208,000 வரை கொரோனா மரணங்கள் உயரலாம் என எச்சரிக்கை!


அமெரிக்காவில் கொவிட்-19 உயிரிழப்புக்கள் நவெம்பா் முதலாம் திகதிக்குள் 2 இலட்சத்து 8 ஆயிரம் என்ற இலக்கை எட்டக்கூடும் என வொஷிங்டன் பல்கலைக்கழகம் தனது புதிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

ஒருவேளை, 95 வீதமான மக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நடந்துகொண்டால் 45 ஆயிரம் உயிா்களைக் காப்பாற்ற முடியும் என வொஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME ) அந்த மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோயின் முதல் அலையின் முடிவைக் கூட அமெரிக்க இன்னமும் எட்டவில்லை. என IHME பணிப்பாளா் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்துள்ளாா்.

விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிகளால் நாடு இப்போது தொற்று நோயின் மிக மோசமான பாதிப்புக்களை எதிா்கொண்டு வருகிறது என அமெரிக்காவின்தொற்று நோய்கள் நிறுவனத்தின் பணிப்பாளா் டாக்டர் அந்தோனி ஃபாசி சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்நிலையில் முகமூடி அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்க சுகாதார நிபுணா்கள் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.

சமீபத்திய ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி அமெரிக்காவில் 131,000 -க்கும் மேற்பட்ட வா்கள் கோவிட்-19 தொற்று நோயால் இறந்துள்ளனா். 2.99 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தொற்று நோயாளா்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனா் எனக் கூறப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE